utma எழுதியவை | ஜூன் 18, 2008

உலகத் தமிழ் மக்கள் அரங்க முதல் ஆண்டு விழா

இடம்: சென்னை – விஜிபி தங்க கடற்கரை (VGP GOLDEN BEACH RESORT )

நாள்: 10-08-08-ஞாயிறு

இப்போது தான் ஆரம்பித்த்து போல் இருக்கிறது ‘உலகத்தமிழ் மக்கள் அரங்கம்’. ஓராண்டு உருண்டோடியதே தெரியவில்லை.

ஆர்குட் பகுதியில் எவ்வளவோ குழுக்கள் (Communities) இருக்கின்றன. நம்மைவிட பலமடங்கு உறுபினர்கள் கொண்ட குழுமங்களும் இருக்கின்றன. ஆனால் இவைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு நமது உலகத்தமிழ் மக்கள் அரங்கத்திற்க்கு உண்டு…..

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளங்களில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் நமது குழுமம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் நமது குழும்ம் இலக்கியத்தையும் , வரலாற்றையும் அன்றாட உலக நடப்புகளையும் அலசும் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது. இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இணையத் தளமும் , கருத்துகளத்திற்க்காக Forum வரும் ஆண்டு விழா அன்று அறிவிக்கப்படும்….

நமது உறுப்பினர்களின் துடிப்பான செயலுக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், முதல் கலந்தாய்வு கூட்டம் (சென்னை வி.ஜி.பி – பிப் 3, 2008) என்று அறிவித்தவுடன் சில நூறு மயில்கள் மட்டுமல்ல பலாயிரம் மயில்கள்களுக்கு அப்பாலிருந்தும் பறந்து வந்து குவிந்தனர்.மேலும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் இருக்கிறோம் நீங்கள் நல்ல முறையில் நடத்துங்கள் என்றும் ஊக்கப்படுத்தி அதற்கான வேலைகளையும் அவர்கள் செய்தனர். இது இணையதளத்திலும் ஆர்குட் குழுமங்களிலும் இன்று வரை அதிசியமாக பேசப்பட்டு வருகின்றது, “உலகத்தமிழ் மக்கள் அரங்க உறுப்பினர்களால் மட்டும் இது எப்படி சாத்தியமாயிற்று” என்று.

ஆகவே இனிமையானவர்களே, பிப்ரவரியில் நாம் சந்தித்த அந்த நினைவுகள் இன்னும் நம் நெஞ்சங்களில் இனித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த இனிமைக்கு தயாராகியிருக்கிறோம் நாம். ஆம், ஆகஸ்ட் மாதம் 10 -08-2008 அன்று அதே விஜிபி கடற்கரையில் (VGP GOLDEN BEACH RESORT ) நமது முதலாம் ஆண்டு விழாவிற்க்காக மீண்டும் கூட இருக்கிறோம்.

இம்முறையும் மிகச்சிறப்பாக நடத்த திட்டம் தயாராக உள்ளது.

அவைகளில் சில:

*உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் பெயரில் இணையதளம், விழா அன்று தொடங்கப்பட உள்ளது.

*முதலில் நமது அரங்கம் அரசாங்க பதிவு செய்து சான்றிதழ் உடன் நடைபெறமுயற்ச்சிகள் நடைபெற உள்ளது.

*பிறகு டிரஸ்ட் ஆரம்பிப்பத்ற்க்கான வேலைகளும் தொடங்கப்பட உள்ளன.(சான்றிதழ்கள் கிடைக்க சில ஆண்டுகள் ஆகும் அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்) தொடர்ந்து நமது பணியை செய்வோம்

* நமது அரங்கத்தின் பெயரில் ஒரு Current Account ஓபன் செய்ய உள்ளோம்
இது Net Banking மூலம் நமது குழு நிர்வாகிகளுக்கு Password கொடுத்து அனைவரும் கண்கானிக்கும் படி இருக்கும்

Cheque Transaction மூலம் அதிகம் நடைபெறுமாறு பார்த்துகொள்வோம்… ஒரு சில சந்தர்பங்களில் பணம் எடுத்து செலவு செய்யும் போது அதற்க்கான ரசிதுகளை ஸ்கேன் செய்து இணையதளத்திலும் வெளியிடபடும்….

நமது பொது நல தொண்டு முதல் ஆண்டு கூட்டத்த்தொடரிலேயே அறிமுகபடுத்தப்படுகிறது நமது அரங்கத்தில் இருக்கும் திரு.ஆறுமுகம் (இவரும் பொது நல மன்றம் வைத்து செயல்படுத்திகொண்டு இருக்கிறார்)

அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்து இருக்கிறார்….அதிக மதிப்பெண்கள் பெற்றும் படிக்க வசதியில்லாத மாணவர்கள் இருவர் இருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று….

அவரின் கோரிக்கையே ஏற்று ஒரு தொகையை நமது முதலாம் ஆண்டு சந்திப்பு நிகழ்சியிளேயே அவரிடம் கொடுத்து நமது பொது நல தொண்டையும் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம்….

அனைவரும் பங்கேற்கும் வண்ணம் போட்டிகள் பல நடத்த திட்டமிட பட்டுள்ளது. நமது அரங்கத்தில் இது வரை எழுதிய மற்றும் இனி எழுதும் அனைவருக்கும்

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:

இலக்கியப் போட்டிகள்

• சிறுகதை,
• கவிதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, பின் நவினத்துவ கவிதை
• கட்டுரை
• நகைச்சுவை
• பகுத்தறிவு சிந்தனைகள்…..

ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம்.

இந்த போட்டிகளுக்குகான உள்ளடக்கம் என்ன? எந்த தலைப்பில் எழுத வேண்டும் என்பதை படைபாளர்களின் சுதந்திரத்திற்க்கே விட்டுவிடுகிறோம்…

ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் ஆண்டு விழா அன்று வழங்கப்படும்.நீங்கள் போட்டிகளை நமது ஆர்குட் தளத்திளேயே பதியலாம்..

இப்போட்டிக்கான விபரங்கள் தயாள்,பாலா,மணி செந்தில்,யுவன் பிரபாகரன்,ஆகியோர் பார்த்துக்கொள்வார்கள்.

டிரஸ்ட் ஆரம்பிப்பத்ற்க்கான வேலைகளும் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பெயர் சேர்ப்பதை உமாசங்கர் அவர்கள் செய்வார்,அவறுடன் நமது அரங்க உறுப்பினர் அனைவரும் அந்த பனியை செய்வார்கள்..

நிழற்படங்கள் & வீடியோ பதிவு மற்றும் சில பொறுப்புகளை பிரின்ஸ் பெரியார் பார்த்துக்கொள்வார் (இம்முறை வீடியோ பதிவை கட்டாயம் கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார்

அழைப்பிதழ்கள், அடையாள அட்டை பேனர் மற்றும் இதர வேலைகளை தமிழ் பார்த்துக்கொள்வார்.

மேலும் சில வேலைகளை நம் அரங்க உறுப்பினர்களுக்கு பிரித்து அளிக்கப்படும்.

முதலாம் ஆண்டு சந்திப்பின் விபரம் & சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சியை பற்றிய முழுவிபரமும் வரும் ஜீலை 15-07-2008 அன்று அழைபிதழையுடன் அரங்கத்தில் தெரிவிக்கப்படும்.

மேலும் நம் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒருவருக்கு ஆகும் செலவு ரூபாய் 300+
(300 ரூபாய் கட்டாய கட்டணம் அல்ல விருப்பப்பட்டு கொடுப்பவர்கள் கொடுக்கலாம் 300 செலுத்தாவர்களுக்கும் அனுமதி உண்டு நமது நோக்கம் அனைவரும் வரவேண்டும் என்பதே…)

கொடுப்பவர்கள் 300 ரூபாய் மற்றும் அதற்க்கு மேலும் தங்கள் பங்களிப்பை செலுத்தலாம்….மற்ற திட்டங்களுக்கு அது உதவியாக இருக்கும்.

பணம் செலுத்த K.SASIKUMAR Account No.714247960,INDIAN BANK, ANNA NAGAR WEST, ASIAD COLONY BRANCH, CHENNAI – 101

விஜிபில் அன்று

10 am Welcome Drinks (fruit punch), 1pm Buffet lunch (Veg & Non veg),Evening assorted bajji,chutney coffee/Tea…..

முன்பு போன்று இந்த முறையும் திட்டங்கள் தொடரும் அடையாள அட்டை மற்றும் பேருந்து…போன்றவைகள்..

சென்ற முறை பேருந்து சற்று தாமத்திற்க்கு நாங்கள் உங்களிடம் வருத்தங்களை தெரிவித்துகொள்கிறோம்….இந்த முறை அப்படி நடைபெறாது என்று உறுதியையும் கொடுக்கிறோம்…சரியாக 9.30 மணி அளவில் விஜிபியில் இருப்பதை போன்று பார்த்துகொள்வோம்..

முன்பு போலவே சென்டரல் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சரியாக 7.30 மணி அளவில் பேருந்து காத்துகொண்டு இருக்கும் அங்கிருந்து பேருந்து புறப்படும் நேரம் 8.30 மணி..

சிங்கபூரில் இருந்து தயாள் (சத்யா) மற்றும் மலேசியாவில் இருந்து உமாசங்கர் வருகை ஊர்ஜிதம் செய்யப்படுள்ளது இந்தோனிசியாவில் இருந்து பாலா 99% வருவாதாக சொல்லியிருக்கிறார்

இது நமது அனைவருக்கும்மான நிகழ்ச்சி அனைவரும் விரைவாக செயல்படுவோம் … சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்பாக செயல்படுத்துவோம்…..

மேலும் விவரங்கள் அறிய, உங்களை பற்றிய தகவல்களை தெரிவிக்க, சசி-9710 304064, தமிழ் -98415 44115

Advertisements

Responses

 1. அன்புத் தோழர்களே,

  நானும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற ஆசைப்படுகிறேன். ஆர்க்குட் மற்றும் உங்கள் குழுமத்தில் என்னை உறுப்பினராக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  தோழமையுடன்
  என் சுரேஷ்

 2. ஒரு புதுக்கவிதை எழுதி போட்டிக்கு அனுப்ப நினைக்கிறேன். இனிமேல் முடியுமா?

  அன்புடன்
  என் சுரேஷ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: