utma எழுதியவை | ஜூன் 14, 2008

சேகுவேரா – அஜயன்பாலா தொடர் -2

இச்சமயத்தில், அவரது எண்ணங் களால் ஒரு கியூபா போராளி வசீகரிக் கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த ஃபொலோன் சியோ பாடிஸ்ட் டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது. காஸ்ட்ரோ சிறை பிடிக்கப்பட்டு, பின் மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்.

நிக்கோலோபஸ§க்கு, குவேத மாலாவில் ‘சே’வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சி யில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.

1955, ஜூலை மாதம், ஒரு குளிர்ந்த இரவில் மெக்ஸிகோ நகரத்தின் வீதியன்றில் மரியோ ஆன்டோ னியோ என்பவரின் வீட்டு முன் வந்து நின்ற காரிலிருந்து, பின்னாளில் புகழ்மிக்க தலைவராக உருவெடுத்த ஃபிடல் காஸ்ட்ரோ தன் சகோதர ருடன் இறங்கினார். வீட்டினுள்ளே அவர்களுக்காகக் காத்திருந்த சே குவேரா எனும் 27 வயது இளைஞன் தன் வாழ்க்கையையே மாற்றப்போகும் ஒரு கைகுலுக்கலுக்காக காத்திருந்தார்.

அடுத்த சில நொடிகளில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நிகழ்ந்தது.
சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோ வும் வெவ்வேறு துருவங்கள். காஸ்ட் ரோவுக்கு போர்க்குணமும் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், போராட்டத்துக்கு வேண்டிய தத்துவப் பின்புலன் இல்லை. ‘சே’வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது. ஆனால் போராடக் களம் இல்லை. இருவரும் இணைந்த போது… சக்திகள் இடம் மாறின!

‘‘உன் முன் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு உன் ரத்தம் கொதிக்குமென்றால், நீ என் தோழன்!’’ இதுதான் சே குவேரா!

கியூபா… குட்டித் தீவு. வட அமெரிக்காவுக்குக் கீழே கரிபியக் கடல்வெளியில், கரும்புக்காடாக விரிந்துகிடக்கும் அழகு தேசம்.

பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி!
ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர். பிற்பாடு, ஸ்பானியர்கள் கூட்டம்கூட்டமாக கியூபாவில் குடியேறினர்.

கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்குக் குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப்பொறிகள்
தோன்றி மறைந்தன.

1890&ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங் களில் அந்த நெருப்பு மட்டும் அணை யாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய, ஸ்பானிஷ் & அமெரிக்க யுத்தம் தொடங்கியது.

1902&ல் ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. திருவாளர் நல்லவராக வந்த அமெரிக் காவோ, கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந் தது. மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர். ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிரதிநிதி யாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடி! ஆயினும், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத் தீயாகப் பரவியது. எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப் பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது. பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார். உடன் போராளிகள் இல்லை. ஆயுதங்கள் இல்லை. அடுத்து என்ன? புரட்சியின் கனவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா?

பலப்பல கேள்விகள் அவரது வானத்தில் வல்லூறுகளாய்ப் பறந்தன. இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் ‘சே’ & காஸ்ட்ரோ சந்திப்பு!

ஒரு மகத்தான வீரனை தனக்குள் இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து கியூபா அரசியலில் எவருக்கும் அறியாத பரிணாம மாற்றங்கள் நிகழத்துவங்கின. வரைபடங்கள் விரிக்கப்பட்டன. புரட்சிக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.

பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக மாறியிருந்தனர். புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது. இம்முறை காஸ்ட்ரோவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது. தனது கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது எனும் நம்பிக்கை.

அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந் திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.

‘கால்கள்தான் என் உலகம்’ என ‘சே’ ஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார். ‘என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனது! அதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்’ எனும் பேருண்மையை அர்த்தப்படுத்தும் வாசகம் இது. இதனால்தான் காஸ்ட்ரோவிடம், ‘கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன்பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்து, வெவ் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்’ என அழுத்தமாகக் கூறியிருந்தார் ‘சே’. காஸ்ட் ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26&ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.

-தொடரும்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: