பயர்பாக்ஸ் பயன்படுத்தாத பண்பாளர்களுக்கும், பயர்பாக்ஸே கதி என கிடக்கும் என் இனிய நண்பர்களுக்கும்….
‘பயர்பாக்ஸ் 3′ இன்று செவ்வாய் (ஜூன் 17 / ஆனி 3) வெளியாகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அதிகளவான பிரதிகளை முதல் நாளில் பதிவிறக்கும் ஒரு கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.
14,000 இற்கும் அதிகமான மேம்படுத்தல்களுடள் பயர்பாக்ஸ் 3 உங்களுக்கு வேகமான, பாதுகாப்பான, இன்னும் சிறப்பான இணைய அனுபவத்தை பெற்றுத்தரும்.
நீங்கள் ஏற்கனவே ஒரு பயர்பாக்ஸ் விசிறி என்றால், புதிய பயர்பாக்ஸை தரவிறக்கி விசிறிப்பாருங்கள். இதுவரை பயர்பாக்ஸ் பாவிக்காதவர் என்றால் இப்பவாவது விசிறிப்பார்க்கலாம்…!
http://www.spreadfirefox.com/en-US/worldrecord/firefox3
பயர்பாக்ஸ் உலாவியில் நான் சமீபத்தில் அறியவந்த ஒரு அருமையான Add-on பெயர் Piclens( http://www.piclens.com/ ). கூகிள் படங்கள் தேடலில் அந்த படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் “ஸ்லைடு ஷோ”போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது.
நிற்க.
இன்று இந்த நம் அபிமான பயர்பாக்ஸ் ஒரு கின்னஸ் உலக சாதனை செய்யவிருக்கின்றது. 24 மணிநேரத்தில் உலகிலேயே அதிக அளவில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற சாதனையை அது செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை உலகெங்கும் 1,247,084 பேர் அந்த புது பயர்பாக்ஸ்3-ஐ ஜூன் 17 அன்று இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். இந்தியாவிலிருந்து மட்டும் 22000 பேர் அதை இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். நீங்களும் இந்த சாதனையில் பங்கு கொள்ளலாம். நாளை அதாவது ஜூன் 17 அன்று பயர்பாக்ஸின் தளம் www.mozilla.com/firefox/ சென்று புதிய FireFox version 3-யை முழுவதுமாய் இறக்கம் செய்து (no upgrade please) உங்கள் கணிணியில் நிறுவி இச்சாதனையில் பங்கு பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு.
http://www.spreadfirefox.com/en-US/worldrecord/
இது போல இன்னொரு உலக சாதனையை செய்ய http://www.internetbigbang.com தயாராகிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஆன்லைனில் இருந்த தளம் என்ற பெயரை இது எடுக்கப்போகின்றது. இதுவரை 836 639 பேர் ஒரே நேரத்தில் இத்தளம் வர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜூன் 20-ம் தியதி இச்சாதனை நடத்தப்படவிருக்கின்றது.
இனி இதுமாதிரி நிறைய சுவையான உலக சாதனைகள் இணையத்தில் நடத்தப்படலாம். ஜாலி தான்.