சிங்கப்பூரில் நமது அரங்கம் சார்பில் நடைப்பெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
-
IBC Tamil
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் – வானொலி
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் – வானொலி
களப்பணி, நிகழ்வுகள், பத்திரிக்கைச் செய்தி இல் பதிவிடப்பட்டது

சிங்கையை சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜ சேகர்
48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை
வரும் 23-05-2009 (சனிக் கிழமை) காலை
பத்து மணி அளவில் தொடங்கி 26-05-2009
(திங்கள் கிழமை) காலை பத்து மணி வரை
நம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை
ஆதரவுடன் உண்ணாவிரத போராட்டத்தை
தொடங்க இருக்கிறார்.
அலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு
ஆதரவு தெரிவிக்கவும்.
சர்வதேச சமூகத்தின்
கவன ஈர்ப்பிர்க்காவும் உலக மக்களின் ஆதரவு
வேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்
கிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில்
தொடர்புக்கு
-
தமிழ் மறையான் 92702429,
-
சத்யா-83984444
சிங்கபூரில் இருக்கும் நம் அரங்க உறுப்பினர்களும் ,தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவும்.
நிர்வாக குழு
-
உலகத் தமிழ் மக்கள் அரங்கம்
அழைப்பிதழ், களப்பணி, நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது
களப்பணி, நிகழ்வுகள், பத்திரிக்கைச் செய்தி, பெரியார் இல் பதிவிடப்பட்டது
நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது
அழைப்பிதழ், களப்பணி, நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது
சிங்கபூரில் வரும் மே 1-05-2009 அன்று ஈழத்தமிழருக்க்காக கொடுங்கோன்மையில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு
தமிழ்வேள் நற்பணி மன்றம் முன்னிலையில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம், எழுத்தேணி அறக்கட்டளை,ஒன்றுபடு தமிழா இணையக் குழுமம் இணைந்து வருகிற மே ஒன்றாம் நாள் (01 – 05 – 2009) சையது ஆல்வி சாலையில் உள்ள (முஸ்தாபா எதிரில்) ஆனந்த பவன் உணவகத்தில் ஒரு நினைவேந்தலை மேற்கொள்கிறோம்.
தமிழை உயிர் மூச்சாய்க் கொண்டு தணியாத விடுதலைத் தாகத்தில் ஈழ விடுதலையின் வித்தாய்ப் போன எம் உறவுகளின் நினைவை ஏந்தி, தமிழை உயிராய் நேசிக்க ஒரு உறுதியேற்பு நிகழ்வாகச் சிங்கை வாழும் தமிழ் நெஞ்சங்கள் அவர்களின் நினைவை ஏந்துகிறோம். கரம் இணைந்து கண்ணீர் மலர் செலுத்தக் கடல் போல் தமிழரே திரள்வீர்.
நாள் : மே திங்கள் 1 ஆம் நாள்
நேரம் : காலை 10.30 மணி
இடம் : ஆனந்த பவன் உணவகம் (முதல் தளத்தில்) – சையது ஆல்வி சாலை – சிங்கப்பூர்
தலைமை: திரு தமிழ்மறையான்
நிகழ்வுகள்: இரங்கற்பா மற்றும் இரங்கல் உரை
மண்ணுக்குள் புதைந்தாலும் மட்கிப் போகாத நம் விடுதலைப் போராளிகளின் நினைவேந்தல் மாறாத தமிழ்ப் பண்பை எம் அடுத்த தலைமுறைக்கும் அடை காத்துக் கொடுப்போம்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உணர்வுக்குத் தோள்.
நிகழ்ச்சி ஒருங்கினைப்பு:உலகத் தமிழ் மக்கள் அரங்கம்
மேலும் விபரங்களுக்கு:
சத்யா-83984444,
வேல்முருகன் -97794440
-
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5329947315057064876&kw=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
அழைப்பிதழ், களப்பணி, நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது
களப்பணி, நிகழ்வுகள், பெரியார் இல் பதிவிடப்பட்டது
களப்பணி, நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது
முக்கிய இழைகள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்:முக்கிய இழைகள்
இலங்கையில் நடைபெறும் இன படுகொலையை கண்டித்தும், இந்திய அரசு ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து செய்து வரும் துரோக செயலை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும், உலக தமிழ் மக்கள் அரங்கம் சார்பாக இன்று (22-02-09), ஈழ சுடர் - மாவீரன் முத்து குமார் அவர்கள் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் தாலுக்கா , கீழமுடிமண் கிராம மக்களும் இணைந்து ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டைதை அங்கு நடத்தினர்.
எழுச்சியோடு நடை பெற்ற இந்த போராட்டத்தில் மக்கள் அதரவு மிகுதியாக இருந்தது. எராளமான பெண்களும் குழந்தைகளும் குடும்பத்தோடு கலந்து கொண்டது மேலும் நம்மை ஊக்கபடுத்தி நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை இது என்பதை உணர்த்தியது …
இந்த போராட்டத்தின் வெற்றியை தொர்ந்து பல்வேறு போராட்டங்களும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளையும் நடத்த போவதாக உலக தமிழ் மக்கள் அரங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே உலக தமிழ் மக்கள் அரங்கத்தின் இளையோர் சார்பாக பெங்களுரிலே கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..
-
-
-









***
உலகத்தமிழ் மக்கள் அ, நிகழ்வுகள், புகைப்படங்கள் இல் பதிவிடப்பட்டது